கோவையில் ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சம் வரி விதித்த சம்பவம்- மாநகராட்சி ஆணையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை…

published 1 week ago

கோவையில் ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சம் வரி விதித்த சம்பவம்- மாநகராட்சி ஆணையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை…

கோவை: கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலை 8 வது வீதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. காவலாளி ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் முன்புற பகுதியில் மெஸ் நடத்தி வாடகைக்கு விட்டு உள்ளார். சர்வே எடுத்த மாநகராட்சி அலுவலர்கள் வீட்டின் மொத்த பரப்பு வணிகப் பகுதியாக மாற்றி சொத்து வரி, மறுசீராய்வு செய்து உள்ளனர்.

 இவர் தனது வீட்டுக்கு இதுவரை வரி ரூபாய் 2,182 செலுத்தி வந்தார். வரி சீராய்வு செய்ததால் இனி 6 மாதத்துக்கு ஒரு முறை ரூபாய் 51,322 சொத்து வரி, குப்பை வரி ரூபாய் 300, அபராதம் கட்டணம் ரூபாய் 1,050 சேர்த்து ஒரு ஆண்டுக்கு 1 லட்சத்து 5,344 செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஓட்டு வீட்டில் பழனிச்சாமி பரிதாபமாக நின்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியானது. இத்தகவலை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் இந்த தவறுக்கு காரணமான வரி வசூலரை பணியிடம் நீக்கம் செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு மெமோ கொடுக்கவும் உத்தரவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி துணை ஆணையர் விசாரணை நடத்தினார். டிரோன் மூலம் ஆய்வு செய்து வரி சீராய்வு செய்த போது பணியாற்றிய வரி வசூலர் ஜெயகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்பொழுது உள்ள வரி வசூலர் ஆனந்த் பாபு, உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe