கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரிவோர்க்கு நலவாரியம்- பயன்படுத்தி கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்...

published 7 months ago

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரிவோர்க்கு நலவாரியம்- பயன்படுத்தி கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்...

கோவை: தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கஅரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட சிறுபான்மையினர் நலஅலுவலகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப்பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்ட சிறுபான்மையினர் நலஅலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் இவ்வாரியத்தில் பதிவுசெய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின்  ஏனைய அமைப்புசாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

அதன்படி

1) கல்வி உதவித் தொகை 10 ஆம் வகுப்புமுதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்படிப்பு, பட்டப்படிப்பு வரை.

2) விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000/-

3) விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை ரூ.10,000/- முதல் 1,00,000/-

4) இயற்கை மரணம் உதவித்தொகைரூ.20,000/-

5) ஈமச்சடங்கு உதவித் தொகைரூ.5,000/-

6) திருமணஉதவித் தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ.5,000/-

7) மகப்பேறு உதவித் தொகைரூ.6,000/- மற்றும் கருச் சிதைவு / கருக் கலைப்பு உதவித் தெகை ரூ.3,000/-

8) கண் கண்ணாடி உதவித் தொகை ரூ.500/-

9) முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோரும்)ரூ.1,000/-

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர்
நலஅலுவலகத்தை (தொலைபேசிஎண்:0422-2300404 மின்னஞ்சல் முகவரி:[email protected])

நேரில் தொடர்புகொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe