கோவையில் திராவிடர் விடுதலை கழக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு?- பாஜக மாவட்ட தலைவர் கைது...

published 7 hours ago

கோவையில் திராவிடர் விடுதலை கழக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு?- பாஜக மாவட்ட தலைவர் கைது...

கோவை: கோவையில் திராவிடர் விடுதலை கழக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட 40 - க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தமிழ் ஈழமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஈழத்துக்கும் திராவிட இயக்கத்திற்கு உள்ள தொடர்பு குறித்து கலந்துரையாடினார் . 

இந்நிலையில்  இந்துக் கடவுள்களை இழிவாக பேசியதாக கொளத்தூர் மணியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் கருத்தரங்கம் நடைபெறும் அரங்கின் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட இந்து அமைப்பினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe