சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வைத்த கோவை ஆட்சியர்...

published 11 hours ago

சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வைத்த கோவை ஆட்சியர்...

கோவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வளைகாப்பை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர்,கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 1640 ஐசிடிஎஸ் சென்டர் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் 1லட்சத்து 38,ஆயிரத்து 327 குழந்தைகள் மற்றும் 24 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல கர்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசு மூலம் கொடுக்கப்படும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

கோடை காலம் வருவதால் இந்த வருடம்  சிறுவாணி குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் பிரச்சனையும் இல்லை.அப்படி இருந்தால் உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

சாலைகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்டம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கூட்டம் ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதே போல் சுல்தான் பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத்துறை சார்பாக கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சல்மா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe