கோவையில் நிகழும் யானை மனித மோதல்கள்- பாமக ஆட்சியரிடம் முன்வைக்கும் கோரிக்கை...

published 21 hours ago

கோவையில் நிகழும் யானை மனித மோதல்கள்- பாமக ஆட்சியரிடம் முன்வைக்கும் கோரிக்கை...

கோவை: கோவை மாவட்டத்தில் காட்டுயானை- மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனிம வன கொள்ளையை தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த அவர்கள் யானையின் படத்துடன் வந்திருந்தனர்.

இது குறித்து பேசிய பாமக கோவை மாவட்ட செயலாளர் ராஜ், கடந்த சில மாதங்களாகவே யானை- மனித மோதல்கள் அதிகமாக இருப்பதாகவும் அதிலும் இந்தியாவிலேயே கோவை மாவட்டத்தில் தான் யானை மனித மோதல்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 9 யானை வழித்தடங்கள் இருப்பதாக தெரிவித்த அவர் அந்த வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாராமல் உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாரதியார் பல்கலைக்கழகமே யானைகள் வழித்தடத்தில் இருப்பது வருந்தத்தக்க விஷயம் என கூறினார்.

மேலும் சீமை கொன்றை மரங்களை அகற்ற வேண்டும் எனவும் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரும்பு கம்பி வேலிகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்பது ஏழைகளுக்கும் சென்று சேர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இது போன்ற விஷயங்களை முன்னெடுக்கும் சமூக போராளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe