4 இடங்களில் ஏறி இறங்கும் தளம்.. லாஞ்சர்ஸ் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கோவை - அவினாசி சாலை மேம்பால பணிகள் விறுவிறு..!

published 2 years ago

4 இடங்களில் ஏறி இறங்கும் தளம்.. லாஞ்சர்ஸ் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கோவை - அவினாசி சாலை மேம்பால பணிகள் விறுவிறு..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D
 

கோவை: கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,600 கோடி செலிவல் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக அமைக்கப்படுகிறது. 
இதற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் இதுவரை 270 தூண்கள் முழுவதும் அமைக்கப்பட்டு விட்டன. இதுதவிர விமான நிலையம் அருகே சிட்ராவில் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறுவதற்கு வசதியாக ஏறுதளம் அமைக்கப்படுகிறது.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "விமான நிலையம், ஹோப்காலேஜ், நவ இந்தியா, அண்ணாசிலை ஆகிய இடங்களில் 7 மீட்டர் அகலத்தில் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த மேம்பாலம் முழுவதும் லாஞ்சர்ஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படுகிறது.

இதற்காக 2 கான்கிரீட் தூண்களில் அதிக திறன் கொண்ட கிரேன்கள் வைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ள கான்கிரீட் தளம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகிறது.
இதன்மூலம் போக்குவரத்து பாதிப்பு இன்றி மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 305 கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 20 தளங்கள் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இதுதவிர 5 இடங்களில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளன." என்றனர்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago