என்னடா ஊருக்கு டிக்கெட் கேட்டா.. நேரா சொர்கத்துக்கே டிக்கெட் கொடுத்துடுவீங்க போல! : அலறியடித்த பயணிகள்.!

published 1 year ago

என்னடா ஊருக்கு டிக்கெட் கேட்டா.. நேரா சொர்கத்துக்கே டிக்கெட் கொடுத்துடுவீங்க போல! : அலறியடித்த பயணிகள்.!

வாஷிங்டன்: என்ன ஆனதென்று பதறிவிட்டீர்களா..? அலாஸ்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்த பயணிகளுடைய 'மைண்ட் வாய்ஸ்' தான் இது.
இரண்டு தினங்களுக்கு முன் அமெரிக்கா-வின் ஆரிகொன் மாகாணத்திலிருந்து கலிஃபோர்னியா மாகாணம் நோக்கி அலாஸ்கன் ஏர்லைன்சின் 'போயிங்க்' விமானம் புறப்பட்டது. 


உயர்தர பயணிகள் விமானமான அந்த விமானத்தில், அது போன்ற 'காஸ்ட்லி' விமானங்களில் இதுவரை ஏற்படாத ஒரு புது விதமான விபத்து நேர்ந்துள்ளது.
பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம், நடு வானில் கடல் மட்டத்திலிருந்து 16,300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் ஒரு ஜன்னல் மற்றும் 'ஃபியூஸ்லேஜ்' என சொல்லப்படும் பயணிகள் அமரும் அறையின் ஒரு பகுதியும் காற்றில் பறந்து சென்றது.


விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்த திடீர் விபத்தால், விமானத்தினுள் பலத்த சத்தத்துடன் கூடிய அதிவேக காற்று அடித்தது. இதனால் பயணிகளின் உடைமைகள், மொபைல் போன்கள் ஆங்காங்கே பறந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது நல்ல விஷயம்.
இத்தகைய 'உயர் (காற்று) அழுத்த' சூழலிலும் விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய விமானியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டாலும் இத்தகைய ஒரு விபத்து ஏற்படும் அளவு அலட்சியமாக இருந்தது கண்டிக்கத்தக்கதே. 

அந்நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரிகள் இது ‘ஒரு சிறிய தர உறுதிப் பிரச்சினை’ என விளக்கம் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னலின் ஆணி கழண்டு விழுந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவித்தனர். மேலும், விமானத்தின் வழக்கமான பறக்கும் உயரமான 38,000 அடியில் விமானம் பறக்காமல், பாதி உயரத்தில் பறந்த போது இந்த விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் விமான நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த விமானம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே வாங்கப்பெற்ற புது விமானம் என்பது விமானப் பயணத்தின் மீதான பீதியை அதிகரித்துள்ளது என்கின்றன விமான பயணிகள். இதனால் ‘போயிங்க்’ நிறுவனத்தின் பங்குகள் பகுதியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago