மனைவியுடன் வீடியோ கால் பேசிவிட்டு கணவன் தற்கொலை…

published 3 weeks ago

மனைவியுடன் வீடியோ கால் பேசிவிட்டு கணவன் தற்கொலை…

கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகமத் பனீஸ்(32). குடிப்பழக்கம் உடைய இவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்ட முகமத் பனீஸ் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டார். 

கோவை வந்த அவர் ரயில் நிலையம் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். பின்னர் தனது மனைவிக்கு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசினார். அதில், தனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இருப்பிடத்தை கேட்டபோது பதில் சொல்லாமல் முகமத் பனீஸ் போன் இணைப்பை துண்டித்து விட்டார். 

பிறகு மனைவி போன் செய்தபின்னரும் எடுக்க வில்லை. இதனால் பயந்து போன அவரது மனைவி மலப்புரம் மாவட்டம் தேனிபாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், முகமத் பனீஸ் பேசிய செல்போன் எண்ணின் டவர் லொக்கேஷனை ஆய்வு செய்ததில், அவர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து காங்கயத்தில் உள்ள முகமத் பனீஸ் உறவினரான ரியாஸ்(34) என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கோவை வந்து அந்த லாட்ஜூக்கு சென்றபோது முகமத் பனீஸ் தங்கியிருந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது முகமத் பனீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவிக்கு வீடியோ கால் பேசிவிட்டு லாட்ஜில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago