அர்ஜுன் சம்பத் மீது கோவையில் வழக்குப்பதிவு- காரணம் என்ன?

published 2 weeks ago

அர்ஜுன் சம்பத் மீது கோவையில் வழக்குப்பதிவு- காரணம் என்ன?

கோவை: கோவை மாநகர போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சமூக வலைதளம் பக்கங்களில் சட்ட விரோத கருத்துக்களை பதிவிடுபவர்களையும், அவதூறு பரப்புபவர்கள், மோதலை தூண்டும் விதமாக பதிவிடுபவர்களையும் கண்காணித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதே போல செல்வபுரம் போலீஸ் எஸ்.ஐ தினேஷ்பாபு சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது எக்ஸ் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மதம் சார்ந்த கருத்துக்களை, இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் விதத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த எஸ்.ஐ தினேஷ்பாபு இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன் சம்பத் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், தவறான தகவலை பரப்புதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago