மொழி வேண்டாம் என்று சொல்வதே ஒரு அரசியல் தான்- சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி...

published 3 days ago

மொழி வேண்டாம் என்று சொல்வதே ஒரு அரசியல் தான்- சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி...


கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் C.P ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மகனின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை வந்ததாகவும் விழாவை முடித்துவிட்டு மீண்டும் மும்பை செல்வதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக தான் கற்க வேண்டும் என்பதை தான் புதிய தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது அனேகமான இடங்களில் மறைந்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் அதில் மும்மொழிக் கொள்கை என்று வரும் போது அதில் மூன்றாவது மொழியாக எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.இந்தி திணிக்கப்படவில்லை என்பது உண்மையான விஷயம் அதற்காக போராட்டம் நடத்தப்பட வேண்டி இருப்பதாக நான் நினைக்கிறேன். 

இரண்டாவது தொகுதி வரையறை என்பது தமிழகத்தில் இருக்கிற 39 தொகுதிகளுக்கு குறைவாக அந்த வரைமுறை இருக்காது என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சர் அனைத்தும் தெளிவுபடுத்துகிறார்கள் அதனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வதை என்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது அந்த வகையில் இதுவும் ஒன்று புதிய தேசிய கல்விக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால் அது தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று.

பீகாரைகள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.ஆனால் அவர்கள் மீது தமிழை திணைக்க முடியாது நாம் எப்படி இந்தியை திணிக்க கூடாது என்று கூறுகிறோமோ அதே போல மற்ற மாநிலத்தவர் மீது தமிழை திணிக்க முடியாது யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை.

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய கேள்விக்கு,

பொதுவாகவே பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக பரவலாக இருந்து வருகிறது.இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள்,அடிமையாக இருப்பது அதனால் கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நான் பாண்டிச்சேரியின் லெஃப்டினன்ட் கவர்னராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் பாண்டிச்சேரிக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டது அதை தடுத்து நிறுத்தப்பட்டதற்கான முயற்சிகளை எடுத்தோம் தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தினால் மட்டும் தான் இது போன்ற பாலியல் பிரச்சனைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

ஏனென்றால் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் இருந்து தான் வருகிறது நான் என்ன செய்கிறோம் என்று தெரியாதவர்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இதையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் கஞ்சா முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.

மொழி வேண்டாம் என்று சொல்வதே ஒரு அரசியல் தான் எந்த மொழியை யார் படிக்க வேண்டும் என்ற உரிமையை மாணவர்கள் இடத்திலே விட்டுவிட வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago