கோவையில் மரக்கடையில் தீ விபத்து- 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…

published 1 week ago

கோவையில் மரக்கடையில் தீ விபத்து- 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…

கோவை: கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (46). இவர் கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது கடையில் திடீரென தீப்படித்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பக்கத்து கடையை சேர்ந்த வினோத் என்பவர் சங்கரேஸ்வரனுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.  இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். 

இதில் மரக்கடைக்கு அருகில் இருந்த பஞ்சர் கடைக்கும் தீ லேசாக பரவியது. இந்த தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ரூ. 28 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இதுகுறித்து சங்கரேஸ்வரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவின் காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு யாராவது செய்த நாச வேலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago