கோவையில் 'சிருஷ்டி 2022' கைவினைப்பொருள் கண்காட்சி

published 2 years ago

கோவையில் 'சிருஷ்டி 2022' கைவினைப்பொருள் கண்காட்சி

கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் சிருஷ்டி 2022 கைவினைப்பொருள் கண்காட்சி துவங்கியுள்ளது.

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகிறது. உலக கைவினை கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் சென்னையிலுள்ள இந்தியக் கைவினை பொருள் சங்கத்தின் அங்கீகாரத்துடன் இது செயல்பட்டு வருகிறது.

இதனிடையே சிருஷ்டி 2022 என்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சியை இந்த கவுன்சில் நடத்துகிறது. கோவை அவினாசி சாலையிலுள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்று துவங்கிய இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள், வடிவமைப்புகள் மற்றும் கைவினை பொருட்களை அதனை உருவாக்கிய கலைஞர்களே நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

ஜவுளிப் பொருட்கள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கும் மகளிருக்கான அழகிய உடைகள், அரிய வகை கற்கள், வீட்டு அலங்கார பொருட்கள், மற்றும் வாழ்வியல் முறை பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



மொத்தம் 58 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உணவு வகைகளுக்கு எனப் பிரத்தியேகமாக 12 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe