கோவையில் மூடப்பட்ட ஐடி நிறுவனம்- தொழிலாளர் துறை அலுவலகத்தில் திரண்ட பணியாளர்கள்...

published 1 day ago

கோவையில் மூடப்பட்ட ஐடி நிறுவனம்- தொழிலாளர் துறை அலுவலகத்தில் திரண்ட பணியாளர்கள்...

கோவை: கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் இயங்கி வந்த Focus Edumatics எனும் அமெரிக்காவை சார்ந்த ஐடி நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மூடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு போராட்டம் நடத்தி தங்களுக்கான நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் கோவை தொழிலாளர் துறை அலுவலர் அலுவலகத்தில் திரண்ட பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன், சம்பளம் மற்றும் நிறுவனத்தில் அளித்துள்ள பள்ளி கல்லூரி அசல் ஆவணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து எழுத்துப்பூர்வமாக தங்கள் கோரிக்கைகள் குறித்து கடிதம் பெற்று தர வேண்டுமென வலியுறுத்தினர்.

இது குறித்து உதவி தொழிலாளர் ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தங்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஒரு மாத சம்பளம் ஆகியவற்றை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினர். இவர்களுக்கு ஆதரவாக CITU தொழிற்சங்கம், DYFI ஆகிய அமைப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe