"ஆட்டோ தம்பி" : கோவைக்கு வருகிறது ஆட்டோ நூலகம்..!

published 2 years ago

"ஆட்டோ தம்பி" : கோவைக்கு வருகிறது ஆட்டோ நூலகம்..!

 

கோவை:  ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோவில் நம்மைத் தேடி வரும் நூலகத்தை மாநகர காவல் ஆணையர் துவங்கி வைக்க உள்ளார்.

கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறாக ஆட்டோவில் பயணிப்பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுநர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்படவுள்ளது.

டாக்டர் கலாம் பவுண்டேசனின் முயற்சியில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் "ஆட்டோ தம்பி" என்ற பெயரில் துவங்கப்பட உள்ளது.

இந்த ஆட்டோவில் புத்தகங்கள் நாவல்கள் இடம்பெறுகின்றன. சோதனை அடிப்படையில் துடியலூரை சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோவில் இந்த ஆட்டோ நூலகம் துவங்கப்பட உள்ளது.

"ஆட்டோ தம்பி" என்ற இந்த ஆட்டோ நூலகத்தை தொலைபேசி மூலம் அழைத்து தங்களது இருப்பிடத்திற்கு வரவழைத்துப் பயணிக்கலாம் என்றும், இதனை வரும் 7ம் தேதி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைப்பார் என்றும் டாக்டர் கலாம் பவுண்டேசனின் நிறுவனர் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe