மதுக்கரை பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு- மக்களை தாக்க வந்ததால் அச்சம்...

published 3 hours ago

மதுக்கரை பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு- மக்களை தாக்க வந்ததால் அச்சம்...

கோவை: கோவை மாவட்டம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வளர்ச்சியின் காரணமாக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய வனவிலங்குகள் உணவு தேடி கோவை மாவட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 

அதனை தடுக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது. மனித - விலங்கு மோதலை தடுக்க விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசு மற்றும் வனத்  துறையினருக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று கோவை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளுக்குள்  உணவு தேடி ஆக்ரோசமாக சுற்றித் திரிகிறது. அதனை விரட்டிய அப்பகுதி பொது மக்களையும் தாக்கியதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து வனத்  துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்ப இடத்திற்கு வனத் துறையினர் வருவதற்குள் அது வேறு பகுதிக்கு சென்று விடுகின்றனர். தகவல் அறிந்து அங்கு வரும் வனத்துறையினர் மீண்டும் அப்பகுதிக்கு குரங்கு வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் சென்ற பிறகு மீண்டும், மீண்டும் அப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களே அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மதுக்கரை மெகா சிட்டி பகுதியில் நுழைந்த குரங்கு ஒன்று வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த காருக்கு மேல் அமர்ந்து கொண்டது. அதனை அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் அதனை சு போ, சு போ என்று விரட்ட  முயன்றார். ஆத்திரமடைந்த அந்த குரங்கு ஆக்ரோஷமாக அவரைத் தாக்க இரும்பு கேட்டின் மீது பாய்கிறது. அதனை தனது செல்போனில் பதிவு செய்த அந்த பெண். அந்தக் குரங்கு இதேபோன்று அப்பகுதியில் விரட்ட முயன்ற பொதுமக்களையும் தாக்கி வருவதாகவும், குரங்கு பார்த்து குறைத்த அப்பகுதியில் இருந்த தெரு நாய் தாக்கி சென்றதாக உள்ளதாக புகைப்படமும் வீடியோவும் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அந்த குரங்கை வனத்துறை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe