சேனல் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய ஜனநாயக கட்சியினர் புகார்

published 2 years ago

சேனல் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய ஜனநாயக கட்சியினர்  புகார்

தனியார் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய ஜனநாயக கட்சியினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான, முனைவர் பாரிவேந்தர் எம்.பி"யை ஆதவன் யூடியூப் சேனலில் கடந்த வியாழன்று ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியில்  மாதேஷ், தமிழா தமிழா இதழின் ஆசிரியர்  பாண்டியன் இருவரும்  அவதூறாக பேசியுள்ளனர்.

மேலும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதோடு

அவரது குடுமபத்தினரையும் தரம் தாழ்த்தி, உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர் .

தகவல் ஒளிபரப்பும் சட்டத்திற்கு எதிராக அவதூறாக செய்தி பரப்பி சமுதாயத்திற்கும், சமூகத்திற்கும் மோதலை உருவாக்கும் வண்ணமும், அரசியல் கட்சியை தரம் தாழ்த்தி, பேசிய இருவரையும் கைது செய்யக்கோரி மாநகர காவல் ஆணையரிடம், இந்திய ஜனநாயக கட்சியினர் புகாரளித்தனர்.

பேட்டி - முத்துச்செல்வம்
இந்திய ஜனநாயக கட்சி மாநகர மாவட்ட தலைவர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe