கோவையில் நேற்று பெய்த மழையின் அளவு என்ன? எங்கு அதிக மழைப் பதிவு..?

published 2 years ago

கோவையில் நேற்று பெய்த மழையின் அளவு என்ன? எங்கு அதிக மழைப் பதிவு..?

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகக் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வந்தது.

நேற்று காலை கோவையில் கடும் வெயில் நிலவியது. மதியத்திற்குப் பிறகு வெயில் குறைந்து வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போல் காட்சியளித்தது. ஆனால் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் நள்ளிரவில் கோவை மாநகரில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், ரெயில் நிலையம், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டி தீர்த்த மழையால், முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

மழைக்கு ஆங்காங்கே தாழ்வான இடங்களிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வார காலமாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது.

நேற்று இரவும் மேட்டுப்பாளையம், சிறுமுகை, சோலம்பாளையம், காரமடை உள்படச் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

இதேபோல் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையால் அணைகள், ஆறுகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திடீர் மழைக் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்கோனா  சுற்றுவட்டாரப் பகுதிகளில் -65
வால்பாறை பி.ஏ.பி சுற்றுவட்டாரப் பகுதிகளில் -49
வால்பாறை தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் -47
சோலையார் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  -37
சின்னக்கல்லார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் -37
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில்-21 
கோவை தெற்கு-17
விமான நிலையம்-18
பெரியநாயக்கன் பாளையம்-18

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe