கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பிறவி இதய குறைபாடுகளுக்கு வெற்றிகரமான சிகிச்சை !!!

published 1 day ago

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பிறவி இதய குறைபாடுகளுக்கு வெற்றிகரமான சிகிச்சை !!!

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (CMCH) பிறவி இதய குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட R.S. புரத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும், ரத்தினபுரியைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவனுக்கும், R.S புரத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நோயாளிகளுக்கு ஏட்ரியல் செப்டல் குறைபாடு (Atrial septal defect) மற்றும் வென்ட்ரிகுளார் செப்டல் குறைபாடு (Ventricular septal defect) என்ற இதய குறைபாடுகள் இருந்து உள்ளன. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி, இந்த குறைபாடுகள் பெர்குடேனியஸ் டிரான்ஸ்கதீடர் (Percutaneous transcatheter) முறை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டன.


இந்த நவீன சிகிச்சையானது, திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, குறைந்த அபாயத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைய முடியும். மேலும், இந்த சிகிச்சை தேசிய சுகாதார பணி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறும்போது :-

 மருத்துவமனையின் இருதயவியல் துறை குழு, இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சாதனை, பொதுமக்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றார்.
இந்த சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர்  நம்பிராஜன் மற்றும் அவரது குழுவினரை கல்லூரி முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe