எதுக்கும் பயப்படாதீங்க... கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை...

published 7 hours ago

எதுக்கும் பயப்படாதீங்க... கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'காபி வித் கமிஷனர்' என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுடன் ஆணையர் சரவண சுந்தர்  கலந்துரையாடினார்  

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய ஆணையர்  சரவணன் சுந்தர், 

"வாழ்க்கையில் நமக்கு  காமன் ரைட்ஸ் கொடுத்துள்ளார்கள். சைபர் குற்றம் மூலமாக  பொதுமக்கள் பணம் இழக்கிறார்கள். சைபர் குற்றத்தைப் பொருத்தவரை முதலில் ஆசையைத் தூண்டுவார்கள். ரூ.5 கோடி கொடுத்தால் ரூ.10 கோடி தருகிறேன் என கூறுவார்கள்.

இத்தகைய மோசடிகள் குறித்து உங்கள் பெற்றோர், சகோதர சகோதரிகள், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
 நிகழ்ச்சியின் புகைப்படங்களைக் காண: https://www.instagram.com/p/DFxb6X_vzl6/?igsh=MWMyemUwdzJ1cXQ0ZA==https://www.instagram.com/p/DFxb6X_vzl6/?igsh=MWMyemUwdzJ1cXQ0ZA==

நீங்கள் எதற்கும் பயப்படக்கூடாது. உலகமே உங்கள் கையில் உள்ளது. சொன்னால் எதையாவது செய்வார்களோ என பயப்படக்கூடாது. மாணவ மாணவிகளிடையே பயம் இருக்கக் கூடாது." என்று, "அச்சமில்லை அச்சமில்லை" என்ற பாரதியின் பாடலை மேற்கோள்காட்டிப் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe