கோவை கடை வீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

published 2 years ago

கோவை கடை வீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியைப் பயன்படுத்தாமல் உக்கடத்திலிருந்து வலதுபுறம் திரும்பி வாலாங்குளம், சுங்கம் வழியாகச் செல்ல வேண்டும்.

உக்கடத்திலிருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன ஓட்டிகள் பேரூர் பைபாஸ் செல்லும் ரவுண்டானா, செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க் வழியாகச் செல்ல வேண்டும்.

பாலக்காட்டிலிருந்து கோவை வரும் வாகனங்கள் போத்தனூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு உக்கடம் வழியாகச் செல்ல வேண்டும்.

உக்கடத்திலிருந்து கோவைப்புதூர், மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா, புட்டுவிக்கிரோடு வழியாக செல்லலாம்.

காந்திபுரம்  கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடிச் சாலை, சிவானந்தா காலனி சாலையைப் பயன்படுத்திச் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகன நிறுத்த இடங்கள், கடைகளின் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சிப் பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்தும் இடங்களாகப் பயன்படுத்தலாம்.


சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe