கோவை மெட்ரோ பணிகள் குறித்து எம்பி மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு...

published 22 hours ago

கோவை மெட்ரோ பணிகள் குறித்து எம்பி மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு...

கோவை: கோயம்புத்தூர் மாநகரில் கோவை சத்தியமங்கலம் சாலையில் கணபதி டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை மெட்ரோ ரயில் சேவை HUGOUT ENTG திட்டமிடல் தொடர்பாக டெக்ஸ்டூல் பாலம் அருகில் கணபதி பேருந்து நிறுத்தம், கணபதி சி.எம்.எஸ்.பள்ளி அருகில் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி,  கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மெட்ரோ திட்ட இணை பொது மேலாளர் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டம் மொத்தம் 34.8 கி.மீ நீளத்தை உள்ளடக்கியது. இதன் மூலதனச் செலவ 10,740 கோடி ஆகும். கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் முதற்கட்டம் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மெட்ரோ திட்டத்தின் நடைமுறைகளை விரைவாக முடிப்பதற்கும், திட்டத்தை செயல்படுத்தும் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்கும், நிலம் கையகப்படுத்தும் திட்டங்களைத் தயாரித்தல், பயன்பாட்டு மாற்றுத் திட்டங்கள், சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்களாக (Multi Modal Integration) இரயில் நிலையங்களின் இணைப்பு போன்ற ஆரம்ப பணிகளைத் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 27ஆம் தேதி அன்று சென்னையில், மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.சித்திக் இ.ஆ.ப, அவர்கள் மற்றும் மெட்ரோ ரயில் தலைமை பொது மேலாளர் ஆகியோரை மாண்புமிகு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர், ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துதல், அதன் காலக்கெடு மற்றும் அதன் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று பணிகள் மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில், மெட்ரோ ரயில் சேவை துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி ஆகிய துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வது குறித்து  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe