10ம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின

published 2 years ago

10ம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின

கோவை: தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி, புதன்கிழமை அன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி வருகிற  28ம் தேதி வரை நடைபெறுகிறது. 

கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 033 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர  2 ஆயிரத்து 047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதைத் தடுக்க 193 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் சென்று திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள். பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல் இன்று தொடங்கிய 10-ம்  வகுப்புத் தேர்வை  41 ஆயிரத்து 811 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 143 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 2,917 தனித்தேர்வர்களும் 10-ம்  வகுப்புத் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணியில் 3 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுகின்றனர்.
தேர்வுகளை புகார்களின்றி நடத்தத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe