சேலம் முதலீடு மோசடி- மூன்று பேர் கோவை சிறையில் அடைப்பு...

published 2 days ago

சேலம் முதலீடு மோசடி- மூன்று பேர் கோவை சிறையில் அடைப்பு...

கோவை: முதலீடு மோசடி விவகாரத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்- கோவை முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து விஜயா பானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகிய மூன்று பேர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்த நிலையில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி பலரும் முதலீடு செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அதனை இரட்டிப்பாக இரண்டு மாதங்களுக்குள் தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து பலரும் முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்குரிய ரசிது தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த மண்டபத்தில் சோதனை மேற்கொண்ட போது முன்பிருந்தே அவர்கள் பல கோடி ரூபாய் வசூலித்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விஜயா பானு மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து திருமண மண்டபத்தில் இருந்து 12 கோடி ரூபாய் பணம்  தங்கம் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கைதான மூவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டு ஜாவான்ஸ் பவன் வளாகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில்
அவர்களிடம் இருந்து கைப்பற்ற பொருட்களின் விவரங்கள் பட்டியல் அளிக்கப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்டது.

தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு சேலம் டிஎஸ்பி வெங்கடேஷ் முன்னிலையில் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து மூன்று பேருக்கும் பிப்ரவரி ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு கோவை முதலீட்டாளர்கள் நல சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து மூன்று பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe