கோவை விவசாயிகள் விதைப் பண்ணை திட்டத்தில் இருமடங்கு வருமானம் ஈட்டலாம்..!

published 2 years ago

கோவை விவசாயிகள் விதைப் பண்ணை திட்டத்தில் இருமடங்கு வருமானம் ஈட்டலாம்..!

கோவை:  கோவையில் விதைப் பண்ணை திட்டத்தின் கீழ் விதைகள் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் இருமடங்கு வருமானம் ஈட்டலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஷபி அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் நெல், சோளம், பயறுவகை பயிர்கள், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களில் சான்று மற்றும் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்வதற்கு விதைப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.

விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் சான்று மற்றும் ஆதார விதைகள் வேளாண்மைத் துறை சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு இருடமங்கு வரை விலை கிடைக்கிறது.

அதன்படி ஆதார விதைகள் கிலோ ஒன்றுக்கு நெல்  ரூ.33, சோளம் ரூ.56, துவரை  ரூ.83, உளுந்து  ரூ.88, பச்சைபயறு  ரூ.88, தட்டைபயறு ரூ.85, கொண்டைக்கடலை ரூ.96, கொள்ளு  ரூ.57, எள் ரூ.138, நிலக்கடலை ரூ.84 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

சான்று விதைகள் கிலோ ஒன்றுக்கு நெல் ரூ.30, சோளம் ரூ.50, துவரை ரூ.79, உளுந்து ரூ.83, பச்சைபயறு ரூ.85, தட்டைபயிறு ரூ.80, கொண்டைக்கடலை  ரூ.92, கொள்ளு  ரூ.55, எள் ரூ.136, நிலக்கடலை ரூ.80 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

தானியங்கள் உற்பத்தியை காட்டிலும் விதைகள் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு விதைப் பண்ணை அமைத்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe