சாலையில் திரியும் கால்நடைகளை பிடிக்க புதிய வாகனம்... கால்நடைகள் வளர்ப்பவர்களே கவனம்..

published 2 years ago

சாலையில் திரியும் கால்நடைகளை பிடிக்க புதிய வாகனம்... கால்நடைகள் வளர்ப்பவர்களே கவனம்..

கோவை: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்கான வாகனம் மற்றும்  புரனமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மேயர் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் நடந்து செல்லும் மக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு  விளைவிப்பதாகவும் அச்சுறுத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்க்கான புதிய வாகனத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன், கால்நடை மருத்துவர் செந்தில்நாதன், பிராணி மித்திரன் தொண்டு நிறுவனத்தினர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

நம்ம ஊரு கனெக்‌ஷன்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe