மது பாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கருமத்தம்பட்டி மக்கள்

published 2 years ago

மது பாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கருமத்தம்பட்டி மக்கள்

கோவை: பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி மது பாட்டில்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். பள்ளிகள், தேவாலயங்கள், ரேஷன் கடை உள்ள பகுதியில் மதுபானக்கடை அமைக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

சோமனூரை அடுத்த செல்வபுரம் காலணி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.

டாஸ்மாக் கடை அமைக்க முற்படும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, ரேஷன் கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.

இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு பாலசுப்ரமணியம் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe