எம்ஜிஆர் ஆத்மா சாந்தியடையவில்லை- கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்...

published 3 days ago

எம்ஜிஆர் ஆத்மா சாந்தியடையவில்லை-  கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்...

கோவை: எம்ஜிஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை என்று எம்ஜிஆரின் தொண்டர் ஜிம் சுகுமாறன் என்பவர் கோவை மாநகரில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளார். 

அந்த போஸ்டரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் இரவும் பகலும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கட்சியை வளர்த்த முதலமைச்சர் ஆனார். மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்தவர் எம்ஜிஆர். 

ஆனால் அன்று அவர் வளர்த்த கட்சிக்குள் பதவிக்காக சண்டை போடுகிறார்கள் இரட்டை இலையை முடக்கவும் முயற்சி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அத்திக்கடவு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் இன்றி விழா நடத்தியது சரியல்ல எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தினகரன் மற்றும் பலர் போடும் சண்டையும் சரியல்ல இன்றுவரை எம்ஜிஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை எல்லோரும் ஒன்றாக இணைந்தால் அவர் ஆத்மா சாந்தி அடையும் என குறிப்பிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe