கோவை ஸ்ரீ நாகசாயி மந்திர் கும்பாபிஷேக விழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டன

published 2 years ago

கோவை ஸ்ரீ நாகசாயி மந்திர் கும்பாபிஷேக விழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டன

கோவை: கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாகசாயி மந்திர் உள்ளது. கோவை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் சாய்பாபா பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர். இந்த ஆலயத்திலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

ராமலிங்கம் காலனி ஐயப்பன் கோவிலிலிருந்து நாகசாயி கோவிலுக்குத் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, நாகசாயி அர்ச்சனை நடந்தது.

28-ஆம் தேதி மாலை முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. 29-ஆம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, 30-ஆம் தேதி மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இன்று மாலை 6-ஆம் கால யாக சாலை பூஜைகள், வேதபாராயணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக காலை 5 மணிக்கு 5-ஆம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி பூஜை நடைபெற்றது.

8.45 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும் சமகால மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அனைத்து மூர்த்திகளுக்கும் காலை 11.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலையிலேயே சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று சாய்பாபாவைத் தரிசனம் செய்து சென்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா அன்னதானமும் நடை பெற்றது. இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீநாகசாயி உற்சவமூர்த்தி திருவீதி உலா நடந்தது. 6.45 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று கோவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

நாளை மண்டல பூஜை நடக்கிறது. காலை 11 மணிக்கு நாகசாயி அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மாலை 7.45 மணிக்கு தங்கரதம் பவனி வருகிறது. 3-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு மகா திருவிளக்கு பூஜை நடைபெறும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe