எந்த சூழ்நிலையாக இருந்தாலும் படியுங்கள்- கோவையை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை...

published 1 day ago

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் படியுங்கள்- கோவையை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை...

கோவை: கோவை அரசுக் கல்லூரியில்
சமீபத்தில் இஸ்ரோ இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைத்து சாதனை புரிந்தது இத்திட்டத்தை செயல்படுத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான பிரபு கோவையைச் சேர்ந்தவர் என்றும் அவரை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடம் கலந்துரையாடுவதற்காக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்

கடந்த 14 ஆண்டுகளாக இஸ்ரோ பணிபுரிந்து வருவதாகவும் மிகவும் பின்தங்கிய இடத்துல இருந்து வந்ததால் மாணவர்களுக்கு பயன் பெறும் வகையில் இது போல மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்ற வந்ததாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகமாக வரப்போகிறது என்றும் மாணவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் குடும்பத்தில் எந்த சூழ்நிலை இருந்தாலும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்று அறிகுறி வழங்கினார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு டிகிரி படிக்காமல் இரண்டு டிகிரி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் வாழ்வில் எவ்வளவோ தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தில் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க வேண்டும் 
அது குறித்து Youtube-யில் நல்ல விஷயங்களை பார்த்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும் அனைவரும் எல்லா விஷயங்களும் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அனைத்து விஷயங்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

நான் படித்து முடித்த காலத்துக்குப் பிறகு இதெல்லாம் தெரியாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டேன் அதேபோல தற்பொழுது இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பிற்காலத்தில் இதைப்பற்றி கவலைப்பட கூடாது எனவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe