பொறியியல் பணியால் 3 ரயில்கள் போத்தனூரில் நிறுத்தப்படும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

published 2 years ago

பொறியியல் பணியால் 3 ரயில்கள் போத்தனூரில் நிறுத்தப்படும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

கோவை: கோவை ரயில் நிலையம்- போத்தனுார் ரயில் நிலையம் இடையே பொறியியல் பணிகள் நடப்பதால், வரும் 5-ஆம் தேதியன்று, மூன்று ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வழக்கமாக, மதுரை - கோவை (16722) இடையேயான ரயில், கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் மதியம் 12:15 மணிக்கு வந்தடையும். பொறியியல் பணிகளால் 5-ஆம் தேதியன்று போத்தனுார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் கோவையில் 2:40 மணிக்குப் புறப்படும், கோவை- மதுரை (16721) இடையேயான ரயில், போத்தனுார் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

கோவை ரயில் நிலையத்துக்குக் காலை 11:10 மணிக்கு வரும், ஷோரனுார் - கோவை (06458) இடையேயான ரயில், கோவை ரயில் நிலையத்திற்கு வராமல், போத்தனுார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில், மாலை 4:30 மணிக்கு, கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், கோவை- ஷோரனுார்(06459) இடையேயான ரயில், போத்தனுார் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

கண்ணுார்- கோவை (16607) இடையேயான ரயிலானது கோவைக்கு மதியம் 1:50 மணிக்கு வந்தடையும். வரும் 5-ஆம் தேதி மட்டும் போத்தனுார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் கோவையில் 2:20 மணிக்குப் புறப்படும், கோவை- கண்ணுார் (16608) இடையேயான ரயில், போத்தனுார் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

இத்தகவலைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe