கோத்தகிரி ரோட்டில் மருத்துவ கழிவுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

published 2 years ago

கோத்தகிரி ரோட்டில் மருத்துவ கழிவுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: கோத்தகிரியில் ரோட்டின் ஓரத்தில் உள்ள வனப்பகுதியில், காலாவதியான மருந்து- மாத்திரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றைப் போடுவதால், வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேட்டுப்பாளையம்- சிறுமுகை வனப்பகுதிகளைப் பிரிக்கும் பகுதியாக, கோத்தகிரி ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாகத் தினமும் சுற்றுலா வாகனங்கள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த வனப்பகுதிகளில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை, என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை இரை தேடவும், தண்ணீர் குடிக்கவும், ஊட்டி- கோத்தகிரி ரோட்டைக் கடந்து, இரண்டு வனப்பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.

மலைப்பகுதியிலிருந்து வேகமாக வரும் வாகனங்கள், வனவிலங்குகள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்க ஊட்டி, கோத்தகிரி ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வனவிலங்குகள், வாகனங்கள் மோதல் குறைந்துள்ளன.

ஆனால் ரோட்டின் ஓரத்தில் உள்ள வனப்பகுதிகளை, பொதுமக்கள் குப்பைத் தொட்டியாக மாற்றி உள்ளனர். கோத்தகிரி ரோட்டின் இரு பக்கமுள்ள வனப்பகுதியில், மது பாட்டில்கள், கெட்டுப்போன உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், குப்பைகள் போடப்பட்டுள்ளன.

இது அல்லாமல், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், ரோட்டின் ஓரத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடக்கின்றன. யானைகள், மான்கள், காட்டு மாடுகள் கடந்து செல்லும் போது, மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: 
"சோதனை சாவடிகளில், நீலகிரி மலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, சோதனை செய்ய வேண்டும். குப்பைகளைப் போடும் நபர்களைக் கண்டறிந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

பொதுமக்கள் வனப்பகுதியைக் குப்பைக் கூடமாக மாற்றினால், வன விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனத்துறையினர், கோத்தகிரி ஊட்டிரோட்டில் உள்ள, மது பாட்டில்களையும், காலாவதியான மருந்துகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe