நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், கோவை மாநகர மாவட்ட தலைவராக ரமேஷ் குமார் நியமிக்கப்பட்டு அதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. ரமேஷ் குமார் தன்னுடைய பொது வாழ்க்கையை இந்து முன்னணி வாயிலாக தொடங்கினார். அதற்குப் பிறகு கட்சியிலே பல ஆண்டுகாலமாக பல்வேறு பொறுப்புகளில் , நிர்வாகம் செய்து கடந்த ஓராண்டாக மாவட்ட தலைவராக நிர்வாகம் செய்தவர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் சரி, அதற்கு முன்பாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அவருடைய பணி என்பது சிறப்பான பணியாக இருந்தது. மீண்டும் இன்று அவர் கோவை மாநகர மாவட்ட தலைவராக பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க பல்லாயிரம் கட்சி, நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்து உள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையை, திட்டமிட்டு அங்கு மத மோதலை உருவாக்குவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறுபான்மை மக்களை தாஜா செய்கிற, வகையில் இன்று அந்தப் பகுதியில் மிகப்பெரிய பதற்றத்தை, தமிழக அரசாங்கமே ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. திருப்பரங்குன்றம் என்றாலே மலை, புனிதமான மலை, முருகப்பெருமான் அருள் பாலிக்கின்ற அந்த மலையிலே, இடையிலே ஏற்பட்ட ஒரு வரலாற்றின் காரணமாக, சிறுபான்மை மக்கள் அந்த மலையை அவர்களுக்கு சொந்தமான மலை என்று சொந்தம் கொண்டாடி அங்கு இருக்கிற, மதத்தினுடைய உணர்வுகளை மதிக்காமல் ஒரு சில விஷமிகள் அங்கு திட்டமிட்ட ரீதியில், மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துகிற செயலில் இறங்கி இருப்பதற்கு, தமிழகத்தில் இருக்கக் கூடிய இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி போன்றவை தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து உள்ளது. நாளை திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த, இந்து முன்னணியின் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். அங்கு அமர்ந்து அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கும், அங்கு இருக்கிற மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் குகைகள், பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது, முற்றிலுமாக அதனுடைய தன்மையை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், இந்துக்களுடைய உணர்வுகளை, பாதுகாக்கும் வகையில் போராட்டம் நடத்துகிற இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது, முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இதற்கு கடுமையான எங்களுடைய கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை ஒவ்வொரு ஒன்றியங்களிலும், இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இந்தப் பகுதி முழுவதும் ஒருங்கிணைப்பாளர் ஏ.பி முருகானந்தம் செய்து இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மத சிறுபான்மை இன மக்களை, அவர்களுடைய வாக்கு வங்கிக்காக தாஜா செய்கின்ற வகையிலே, இந்து மத உணர்வுகளை அவமதிப்பது, அவமானம் செய்வது, இழிவு படுத்துவது போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்கிறார்கள். தங்களுடைய வீட்டுப் பெண்மணிகள் கோவிலுக்கு செல்வதை, தாங்கள் ஏதோ இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதைப் போல காட்டிக் கொண்டு, மற்றொரு பக்கம் இந்து மக்களுடைய உணர்வுகளை புறக்கணித்து கொண்டு இருக்கிறது தி.மு.க அரசு.
வருகிற தேர்தல் என்பது, அவர்களுடைய நிர்வாக சீர்கேட்டினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாலும், மக்கள் கோபத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்து மக்களுடைய உணர்வுகளோடு, விளையாடுவதற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இன்று காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி கூறியிருக்கிறார், காவல்துறை சீருடை பணியாளர், வாரியத்தில் நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்ட வாய்ப்புகள் இருந்த காரணத்தால் அந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. என்னோட உயிருக்கே பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று, காவல் துறையின் ஏ.டி.ஜி.பி பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி குறிப்பிடுகிறார் என்றால், தமிழகத்தில் எந்த அளவிற்கு காவல் துறை, முழுவதுமாக சீர்குலைந்து போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. வழக்கமாக அரசாங்க அதிகாரிகள், இதை வெளியே கூற மாட்டார்கள். ஆனால் அந்த பெண் அதிகாரி அந்த துயரத்தை தாங்க முடியாமல், எப்படி இந்த அரசு ஒரு சீர்கேடான அரசாக இருக்கிறது, காவல்துறை உயர் அதிகாரியிடம் கொடுத்த புகார் ஆறு மாதங்களாக விசாரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
இது எவ்வளவு பெரிய அவமானமான விஷயம், இந்த விஷயம் தமிழக காவல்துறைக்கு பெரிய களங்கத்தை கொண்டு வந்து இருக்கிறது. காவல்துறையை கையில் வைத்து உள்ள மாநிலத்தின் முதலமைச்சர், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது என்று கூறினார்.
மத்திய பட்ஜெட்டை பொருத்த வரை யாராலுமே குறை சொல்ல முடியாத ஒரு பட்ஜெடாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் சொல்வதற்கு ஒரு பாயிண்ட் கூட கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம். இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. அப்படி இருக்கையில் ஆட்சியைத் தக்க வைக்க எதற்காக பட்ஜெட் போட வேண்டும்? அதே போல டெல்லி தேர்தல் களம் என்பது முழுமையாக பா.ஜ.க பக்கம் பிரகாசமாக இருக்கிறது. சாதாரண மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி மீது வெறுப்பு பல மடங்கு இருக்கிறது. மோடி அரசின் பலனை பெற வேண்டும் என அந்த மக்கள் நினைக்கிறார்கள். வெகு நிச்சயமாக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. 67 மாவட்டங்களில், 66 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. மாநிலத் தலைவர் என்பது கட்சியின் மேல் இடம் முடிவு செய்து அறிவிக்கும் போது தெரியவரும் என்று கூறினார்.