கோவையில் ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்து பெட்ரோல் பங்க் பணியாளரை தாக்கிய குடும்பம்...

published 7 hours ago

கோவையில் ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்து பெட்ரோல் பங்க் பணியாளரை தாக்கிய குடும்பம்...

கோவை: கோவை சிங்காநல்லூர்  குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வருபவர் புஷ்பராஜ். இவர் நேற்று தாராபுரம் சென்று விட்டு மாலை கோவை திரும்பி உள்ளார். சிங்காநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஆட்டோ ஒன்றை ஒவர் டேக் செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது ஆட்டோவை சேதப்படுத்தியதாக கூறி ஆட்டோவில் இருந்த முகமது ஆசிக் என்பவரும் முகமது ஆசிக்கின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் புஷ்பராஜ் காரை எடுத்து கொண்டு குளத்தேரி பங்க்கிற்கு வந்துள்ளார்.

அவரை ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த முகமது ஆசிக் மற்றும் குடும்பத்தினர் பெட்ரோல் பங்க்கிற்கு வந்து புஷ்பராஜை தாக்கி உள்ளனர். மேலும் அவரது காரையும் சேதப்படுத்தி உள்ளனர். இதில் புஷ்பராஜிற்கு நெற்றியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  தொடர்ந்து இது குறித்து புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல்துறையினர் முகமது ஆசிக் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பெட்ரோல் பங்கில் புஷ்பராஜை முகமது ஆசிக் மற்றும் குடும்பத்தினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.facebook.com/share/r/15jsckGuQv/

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe