உள்நாட்டுத் தாவரங்களை விதைத்தால் உணவுச்சங்கிலி பாதுகாக்கப்படும்: கோவையில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் தகவல்

published 2 years ago

உள்நாட்டுத் தாவரங்களை விதைத்தால் உணவுச்சங்கிலி பாதுகாக்கப்படும்: கோவையில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் தகவல்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊடுருவிய மரத் தாவர மேலாண்மை குறித்து சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், சுதா ஐ. எப். எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:- 
"நாட்டில் உள்ள வனப்பகுதியில் கருவேலமரங்கள், உன்னிச் செடிகள், பார்த்தீனியம் உள்ளிட்ட ஏராளமான அந்நிய தாவரங்களால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வனத்தில் பரவும் உன்னிச் செடிகளால் வன உயிரினங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமில்லாமல் அது வனத்திற்கும் கேடு விளைவித்து மண் வளத்தைப் பாதிக்கிறது.

எனவே இதனைக் களையெடுக்கத் தமிழகத்தில் தற்போது மாநில திட்ட ஆணைய நிதியுதவியுடன் புதிய திட்டம் ஏற்படுத்தப்படுகிறது. வனத்தில் உன்னிச் செடிகளை அகற்றி நாட்டு மரங்களை அதிகளவில் ஏற்படுத்துவதால் வனவிலங்குகளுக்கான உணவு சங்கிலி பாதுகாக்கப்படும். எனவே அதனை விரைந்து செயல்படுத்த 5 மாநில வன அதிகாரிகள் கருத்தரங்கில் வலியுறுத்தி உள்ளோம்."
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதில் சென்னை மாநிலத் திட்ட ஆணைய உறுப்பினர்கள் டி. ஆர். பி ராஜா, சீனிவாசன் ஆகியோர் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், உத்தராஞ்சல், கர்நாடகா மாநில வனப்பாதுகாப்பு அலுவலர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளான மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் முனைவர் சேகர் நன்றி கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe