கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்- எதற்காக?

published 1 day ago

கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்- எதற்காக?

கோவை: கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டனம் தெரிவித்தும்


தமிழகத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் அவர்களது உயிருக்கு உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதால் வழக்கறிஞரின் நலனை பாதுகாக்கும் வகையில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.

தமிழக அரசு வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரைத்தாள் கட்டணத்தை ரூபாய் 30 இல் இருந்து 120 ஆக உயர்த்தப்பட்ட உள்ளதை திரும்ப பெற வேண்டும் சேம நல நிதியாக 10 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.

மத்திய அரசின் புதிய வழக்கறிஞர்களின் சட்ட திருத்த மசோதா மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றங்கள் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.  

அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe