பாதுகாப்பு கோரி ஐஜி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் தம்பதி...!

published 2 years ago

பாதுகாப்பு கோரி ஐஜி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் தம்பதி...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/HjISDgAc4xN4oifdJzUxU0

கோவை: கோவையில் காதல் ஜோடி கழுத்தில் மாலையுடன் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). மர வேலைப்பாடுகள் செய்யும் பிரவீன்குமாரும்  ஓசூரை அடுத்த  சாமனப்பள்ளி  பகுதியைச் சேர்ந்த நதியா(19)-வும் சிறுவயது முதலே நண்பர்கள்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த நதியாவை மேல்படிப்பிற்கு அனுப்பாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோர்கள் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று கோவை வந்தடைந்தனர். இருவரும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில்  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் முன்னிலையில் சாதி மறுப்பு  திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் செய்த மாலையுடன் கோவை பந்தயச்சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்களது பெற்றோர்களிடமிருந்து  பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe