கோவையில் இந்த மாதக் கடைசியில் அரசுப் பொருட்காட்சி: ஆட்சியர் தகவல்

published 1 year ago

கோவையில் இந்த மாதக் கடைசியில் அரசுப் பொருட்காட்சி: ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். 

தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

"தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்காட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்த பொருட்காட்சியில் செய்தி -மக்கள் தொடர்புத்துறை உட்பட 27 அரசுத் துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. 

தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.

மேலும் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப் பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பேருந்துகள் செல்லும் வகையில் கூடுதல் பேருந்து சேவை வசதிகள் செய்யப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe