ஒவ்வொருவருக்கும் 4 சென்ட் இடம்.. கோவையில் வயலில் இறங்கிய மாணவர்கள்..!

published 2 years ago

ஒவ்வொருவருக்கும் 4 சென்ட் இடம்.. கோவையில் வயலில் இறங்கிய மாணவர்கள்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நன்செய் பண்ணையில் நெல் நடவு செய்தனர்.  

இளமறிவியல் வேளாண்மை படிக்கும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தானாக வயலில் நெற்பயிர் பயிரிடுவர்.

மாணவர்களுக்கு 4 சென்ட் அளவு நிலம் வழங்கப்படும்.  அதில் அவர்கள் சேற்றுழவு முதல் அறுவடை முதலான அனைத்து பணிகளையும் செய்வர்.  


மாணவர்களின் நெற்பயிர் நடவு, பல்கலைக்கழக நன்செய் பண்ணையில் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் துவங்கியது.  துவக்க விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாடப்பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக முதன்மையர் வெங்கடேசபழனிசாமி நடவு விழாவை துவக்கி வைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe