இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: தமிழகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் சட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த சட்ட மசோதா நகல்களை எரித்தும், தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் நகல் எரிப்பை தடுக்க முற்பட்டதால் அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe