வாழ்க்கையும் சினிமாவும்- கோவையில் நடிகர் பாக்யராஜ் பேசிய சுவாரஸ்யமான உரை...

published 1 day ago

வாழ்க்கையும் சினிமாவும்- கோவையில் நடிகர் பாக்யராஜ் பேசிய சுவாரஸ்யமான உரை...

கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா வளாகத்தில் கோவை மாவட்டம் பாக்யராஜ் நற்பணி மன்றத்தின் 43-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் கே.பாக்யராஜ் மற்றும் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான பிரதீப் ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையற்றோர்களுக்கு மளிகை பொருட்களும் அதேபோல் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கினர்.

பின்னர் ரசிகர்களிடம் பேசிய நடிகர் பாக்யராஜ்

முதன் முதலில் சுவர் இல்லாமல் சித்திரம் என்ற படத்தை இயக்கிய போது எதிராக தான் பேசினார்கள் அப்போது நான் அவர்களிடம் கூறுகையில் நான் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டது வைத்து தான் சினிமாவாக எடுப்பேன் என்றும் தற்போது வரை வாழ்க்கையின் அனுபவத்தை தான் சினிமாவை எடுத்துள்ளதாக ரசிகர் மத்தியில் தெரிவித்தார். வாழ்க்கையில் என்ன வருகிறது அது தான் சினிமாவில் வரும் என்றும் சினிமாவில் என்ன வருகிறதோ அது தான் வாழ்க்கை என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe