கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு- கருப்புகொடி கட்டி கடையடைப்பு போராட்டம் நடத்திய மக்கள்...

published 12 hours ago

கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு- கருப்புகொடி கட்டி கடையடைப்பு போராட்டம் நடத்திய மக்கள்...

கோவை: தமிழ்நாட்டில் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தும் புதிய ஊராட்சிகளை உருவாக்கியும் தமிழ்நாடு அரசு அரசாணையானது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் 4 பேரூராட்சிகள் மற்றும் 1 நகராட்சி என 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட உள்ளது. இதற்கு சில ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கீரணத்தம் ஊராட்சி பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டியும் கடைகளை அடைத்தும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று முழக்கங்களையும் எழுப்பினர்.

இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் ஊராட்சி மாநகராட்சியாக தரம் உயரும் பொழுது இப்பகுதியில் கிராமப்புற வேலை திட்டம் 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாதிக்கப்படும் எனவும் எந்த ஒரு தேவை தேவைப்பட்டாலும் ஒரு கவுன்சிலரையே நாட வேண்டி இருக்கும் அல்லது நகருக்குள் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தை நாடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தனர்.

அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காத பட்சத்தில் இனிவரும் நாட்களில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe