புகையிலையின் தீமைகளை விளக்கும் 'டிஜிட்டல் ஃபிளிப் புக்' அறிமுகம்: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம்

published 2 years ago

புகையிலையின் தீமைகளை விளக்கும் 'டிஜிட்டல் ஃபிளிப் புக்' அறிமுகம்: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி  மையம்

 கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA


கோவை: உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி  மையம் சார்பில் புகையிலையின் தீமைகளை விளக்கும் டிஜிட்டல் ஃபிளிப் புக் அறிமுகம் செய்யப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி  மைய இயக்குநர் டாக்டர் குகன்  தலைமையில் புகையிலையின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் டிஜிட்டல் ஃபிளிப் புக் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில்  15 பக்கங்கள் கொண்ட இந்த ஃபிளிப் புக், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் முன்னிலையில், போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் வெளியிட்டார். பிளிப் புக்கை  அணுக ஒரு லிங்க் (www.nosmokingsrior2022.digione.in) கொடுக்கப்பட்டுள்ளது. 

புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் பற்றி டாக்டர் குகன் கூறியதாவது:-
"புகையிலையால் ஏற்படும் தீமைகள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன என்பது தொடர்பான உரையாடல்கள் மற்றும் அனிமேஷன் வீடியோ, விழிப்புணர்வுத் தகவல் இந்த ஃபிளிப் புக்கில் உள்ளது. இந்த ஃபிளிப் புக், ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவது போன்ற உணர்வைக் கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இது முதல் முயற்சி. 

சிகரெட்டில் இருந்து வரும் புகையில் குறைந்தது 5௦ வகை புற்றுநோய்களை உண்டாக்கும் இரசாயனங்கள் (கார்சினோஜென்கள்) உள்ளன. அவை நுரையீரல் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்துவதில்லை. அவை தொண்டை, உணவு-குழாய், கல்லீரல், பித்தப்பை, இதயம், கணையம், சிறுநீர் ஆகியவற்றையும் பாதிக்கிறது. சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் சில சமயங்களில் இரத்த புற்றுநோய் கூட ஏற்படலாம். புகைபிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 30-40% அதிகரிக்கும்." இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் மற்றும் இயக்குநர் டாக்டர்.பி.சுகுமாரன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.ஆர்.கார்த்திகேஷ் உட்படப் பலர் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe