கோவையில் ஏழைகளுக்கு உணவளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

published 1 year ago

கோவையில் ஏழைகளுக்கு உணவளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

கோவை: நடிகர் விஜய்யின் அழைப்பை ஏற்று கோவையில் பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கி அசத்தினர்.

 உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும்  ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டிருந்தார்.

அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பிய நிலையில்,நடிகர் விஜய்யின் அன்பு கட்டளையை ஏற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டத்தின் படி மதிய உணவு வழங்கினர்.

அதன்படி கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு அணியினர் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

பிரியாணி,வெரைட்டி ரைஸ் வகைகள்,வடை பாயசத்துடன் கூடிய முழு சாப்பாடு என கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe