விஜயின் குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க சொல்லுங்கள்- கோவையில் ஹெச்.ராஜா ஆவேசம்...

published 3 days ago

விஜயின் குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க சொல்லுங்கள்- கோவையில் ஹெச்.ராஜா ஆவேசம்...

கோவை: மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் சுந்தரபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்து பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா கலந்து கொண்டார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது,


பட்ஜெட்டில் வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் சிக்ஸர் அடித்து உள்ளார்.
வருமான வரியில் 2014 - ம் ஆண்டு 2.5 லட்சம், 2019 - ம் ஆண்டு 5 லட்சம் தற்போது 2024 - ம் ஆண்டு 12  லட்சம் ரூபாய் வரை வரி விளக்கு கொண்டு வந்து உள்ளார். 12 லட்சம் வருமானம் பெறுபவர்கள் 60 முதல் 80 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டிய நிலைமை இருந்தது. அவர்களுக்கு  தற்போதைய வரி விலக்கினால் 80,000 ரூபாய் வரை மிச்சமாகிறது.
 

விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகம் பட்ஜெட்டில் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் இருந்த பயிர்கடனை ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தி உள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் பொழுது போகவில்லை என்பதால், மொழி பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின் கையில் தூக்கிப் பேசிக் கொண்டு இருக்கிறார். இது போன்று பேசுவதற்கு தமிழக முதல்வருக்கு வெட்கம் இருக்காதா ?.

ஹிந்தி உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் உங்கள் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லித் தரக் கூடாது. உங்கள் தகப்பனார் கருணாநிதி சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார் தானே...

முதலில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 1 முதல் 8 வரையில் உள்ள மாணவர்களை மாற்றுவதற்கு துப்பில்லை என்றால் எதற்கு அமைச்சராக இருக்க வேண்டும்?. நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம் ஆனால் ஏன் அரசு பள்ளியில் இந்தி இருக்கக் கூடாது ? என கேள்வி எழுப்பினார்.


ஆனைமலை - நல்லார் திட்டம் நீண்ட நாளாக கிடைப்பில் உள்ளது.
கேரள மாநிலம் சென்ற முதல்வர் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதே போல, கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளது. அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அந்த குப்பை கிடங்கால்,  நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதெல்லாம் திராவிட மிருகங்கள் ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது.

திராவிட மிருகங்கள் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, கோவை மாநகராட்சி அயோக்கியர்கள் கூட்டமாக உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் கோவை மாநகராட்சிக்கு மக்கள் யாரும் வரி கொடுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் பேன்சி மூட நம்பிக்கை என்னவென்றால் மத்திய அரசிற்கு எதிராக பேச வேண்டும் என்பது தான்.


த.வெ.க விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா ?
மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள். இரு மொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் நாளை காலை அவர்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேருங்கள்.. எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கைக்கு தடையில்லை. 

விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சி பள்ளியில் படிக்க வையுங்கள் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe