மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்ததானம்!...

published 1 year ago

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்ததானம்!...

கோவை: மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ரத்ததானம் செய்தனர்.

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை சர்வதேச விமானநிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் ரத்த தான முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 முகாமை விமானநிலைய இயக்குநனர் செந்தில்வளவன் தொடங் கிவைத்தார். விமான நிலைய கமாண்டன்ட், சி.ஐ.எஸ்.எப்., தினேஷ் பி தாஹிவத்கர், உதவி கமாண்டன்ட் அங்கித் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர்கள் குழுவினர் ரத்த தானம் பெற்று சென்றனர். 

இதில் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் லோரன்ஸ், இன்ஸ்பெக்டர் பயாசி, எஸ்.ஐ., கார்த்திக் உட்பட, 32 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 21 இதர பணியாளர்கள் என மொத்தம், 53 பேர் ரத்த தானம் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe