வெள்ளியங்கிரி கோவில் அன்னதான கூடத்தில் காட்டுயானை- வைரல் வீடியோ காட்சிகள்...

published 2 days ago

வெள்ளியங்கிரி கோவில் அன்னதான கூடத்தில் காட்டுயானை- வைரல் வீடியோ காட்சிகள்...

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

 குறிப்பாக தடாகம், மாங்கரை, கணுவாய், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், மருதமலை, வெள்ளியங்கிரி, காருண்யா ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

பல்வேறு சமயங்களில் மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில் இரவு வெள்ளியங்கிரி கோவில் பகுதியில் சுற்றி திருந்த ஒற்றை காட்டுயானை கோவில் அன்னதான கூடத்தில் இருந்த பொருட்களை சாப்பிட்டுள்ளது. 

தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் தற்போது அந்த யானை காருண்யா கல்லூரி அருகே சுற்றி திரிந்து வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.facebook.com/share/r/19XjPcFf9T/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe