கோவையில் கலைஞர் கருணாநிதி உருவில் 100 கலைஞர் பேரணி.!

published 1 year ago

கோவையில் கலைஞர் கருணாநிதி உருவில் 100 கலைஞர் பேரணி.!

கோவை விகேகே மேனன் சாலையில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற உள்ளது. இதில் திமுக உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக கலைஞர் உருவில் 100 கலைஞர் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100 பேர் கலைஞர் கருணாநிதி போல் வேடமிட்டு பேரணி மேற்கொண்டனர்.

இந்தப் பேரணியானது காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி விகேகே மேனன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த பேரணியுடன் இணைந்து நிகர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது.


அதில் கணபதி மாநகர் பகுதியை சேர்ந்த இனியன் என்ற சிறுவன் பறை இசைத்தது அனைவரையும் கவர்ந்தது. இந்தப் பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றியவர் கலைஞர், பெரியார் சமத்துவபுரம் உருவாக்கியவர் கலைஞர், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்தவர் கலைஞர்,

தமிழ் வழி மாணவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர், மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் எனும் பிரிவை உருவாக்கியவர் கலைஞர், சாதியற்ற சமூகம் உருவாக கலப்புத் திருமண நிதி உதவி வழங்கியவர் கலைஞர், மாநில முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் கலைஞர், பேரறிஞர் அண்ணாவின் மாணவர் கலைஞர், அரவாணி என்ற சொல்லை திருநங்கைகள் என்று மாற்றியவர் கலைஞர் போன்ற பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

அதே போல் கலைஞர் போல் வேடமிட்டு 100 பேர் பேரணியாக சென்றது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe