வாகன ஓட்டிகளே உஷார்... தமிழ்நாட்டில் உயர்கிறது சாலைவரி!..

published 1 year ago

வாகன ஓட்டிகளே உஷார்... தமிழ்நாட்டில் உயர்கிறது சாலைவரி!..

கோவை : தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் ஒருசில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, வரியை உயர்த்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் சட்டசபை பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர், வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்போதே சாலை வரி விகிதங்களை உயர்த்தவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பிடிஆர்: காரணம், தமிழ்நாட்டில் உள்ள இப்போதைய வரி விகிதங்கள், தென் மாநிலங்களிலேயே மிக மிக குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதையடுத்து, வரியை சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்து துறையும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு பிறகு, தற்போது, சாலை வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை 5 சதவீதம் உயர போகிறதாம்.. மோட்டார் சைக்கிள்களுக்கான இப்போதைய சாலை வரி கட்டணம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்திலும், கார்களுக்கான சாலை வரி கட்டணம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 15 வருடங்களில் மொத்த வாகன செலவில் 8 சதவீதம் இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரியாக விதிக்கப்படுகிறது.

என்ன காரணம்: இந்த புதிய அறிவிப்பு மூலம் ரூ.1 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

வரிவிதிப்பு: அதேபோல, ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 சதவீதம் சாலை வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீத வரியும் தற்சமயம் விதிக்கப்பட்டு வரும்நிலையில், புதிய அறிவிப்பின்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

அதேபோல, ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தற்போதைய போக்குவரத்து துறையின் ஆண்டு வருவாய் ரூ.6,674.29 கோடியாக உள்ள நிலையில், இந்த வரி உயர்வின் மூலம், இன்னும் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரிவிதிப்பு: சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டு, இது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

எனவே, புதிய வரி உயர்வு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும், அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe