கோவை பி.எம்.ஜெ ஜூவல்ஸ்-ல் பிரம்மாண்ட நகை கண்காட்சி

published 1 year ago

கோவை பி.எம்.ஜெ  ஜூவல்ஸ்-ல் பிரம்மாண்ட நகை கண்காட்சி

கோவையில் பி.எம்.ஜெ  ஜூவல்ஸ் தனது முதலாவது ஆண்டை முன்னிட்டு மிகப்பெரிய நகைக் கண்காட்சியை துவங்கியுள்ளது. இதனை டாக்டர் ஜெயா மகேஷ் குத்துவிக்கேற்றி துவக்கி வைத்தார்.

தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஃபைன் ஜூவல்லரி பிராண்டான பி.எம்.ஜெ ஜூவல்ஸ். கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள  ஷோ ரூமில் முதலாவது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது.

இதன்  ஒரு பகுதியாக, பி.எம்.ஜெ  ஜூவல்ஸ் கோவை இதுவரை கண்டிராத மிகப்பெரிய தங்க மற்றும் வைர நகைக் கண்காட்சியை துவங்கியுள்ளது.

இதில், வைரம், தங்கம் மற்றும் போல்கி நகைகள், சேகரிக்க பட்டு  காட்சிக்கு வைக்க பட்டுள்ளன.

இக்கண்காட்சியின் துவக்கவிழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக  ஃபேஷன் ஐகான், டாக்டர் ஜெயாமகேஷ், பி.எம்.ஜெ ஜூவல்ஸ்ன் இந்தியா & இன்டர்நேஷனல் சந்தைப்படுத்தல் தலைவர் அனூப் கருணாகரன், பி.எம்.ஜெ ஜூவல்ஸ் தமிழ்நாடு வணிகத் தலைவர் செந்தில் குமார் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 10 வரை  இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதுவரை கண்டிராத 10,000 த்திற்கும் மேற்பட்ட கைவினைப் படைப்புகள் கொண்ட நகைகள் இங்கு, காட்சிப்படுத்தபட்டுள்ளன.

கண்காட்சியில் திருமண நகைகள் தங்கம் மற்றும் வைரம், தினசரி அணிகலன்கள் மற்றும் பண்டிகை கால நகைகள், அலுவலகம், பார்ட்டி மற்றும் வழக்கமான உடைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற நகைகள்காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தங்கத்தில் கைவினைப்பெற்ற திருமண சேகரிப்புகள் மற்றும் அனைத்து வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள், தூய்மையான வைரங்கள், வெட்டப்படாத, போல்கி மற்றும் அரிதான கற்கள் - ரூபி, சபையர், மரகதம் ஆகியவை இக்கண்காட்சியில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe