ராணுவ அக்னி வீர் பணியில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

published 1 day ago

ராணுவ அக்னி வீர் பணியில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

கோவை: கோவையில் தனியார் அமைப்பு சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் இந்திய ராணுவ அக்னி வீர் திட்ட த்தில் சேரவும் இளைஞர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

கோவையில் தனியார்  அமைப்பின்  25"வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில்   இருந்து சுயதொழில் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் என 100 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டன.

குறிப்பாக இராணுவபடை பிரிவான அக்னிவீர் திட்டத்தில் ஆள் சேர்க்கவும் இராணுவத்தினர் அரங்கு அமைத்திருந்தனர்.

தனியார் பங்களிப்புடன் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில்  ஏராளமான இளைஞர்கள் பதிவு செய்து இராணுவத்தில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தனியார் அமைப்பின் மில்லினியம் தலைவர் சந்தான குமார் மற்றும் நிர்வாகிகள் செபாஸ்டியன்,
டேவிட்,ராஜேஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி உடைய 2000"த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe